Thursday, 29 April 2010

திருஷ்: கயல்விழி - பாகம் 2


பயணம் தொடர்கிறது, சிறிய சிறிய வேட்டுச்சத்தங்கள் தூரத்தே கேட்பதை உணரமுடிகிறது. நெருங்கி செல்ல செல்ல சத்தம் கனக்கின்றது. இப்போது தான் இளங்கோ பிரச்சனையின் வீரியத்தை உணரத் தொடங்கினான். வழியில் முன்பு மிருகங்களின் உடலைப்பார்த்தவனுக்கு இப்போது மனித உடலங்களையும் காணக்கூடியதாக இருந்தது. கடவுளை மனதிற்குள் திட்டித்தீர்த்தவனுக்கு, கயல்விழியின் ஞாபகம் வந்தது.


கயல்விழி வேறுயாருமில்லை அவனுடைய முறைமாமன் மகள். சிறு வயது முதல் பாடசாலை செல்வதென்றாலும் சரி, கோவில்களுக்கு செல்வதென்றாலும் சரி இளங்கோவுடன் தான் செல்வாள். அவள் மிகவும் மென்மையான மனம் கொண்டவள். மாணிக்கம், செல்லம்மாவின் ஒரே மகள். மாணிக்கம் உரத்த குரலில் கயல் என்றாலே போதும், கண்ணில் இருந்து தண்ணீர் ஓட ஆரம்பித்துவிடும். அவ்வளவு இளகிய மனம் கொண்டவள். இளங்கோவிற்கு அவள்மீது காதல் இருந்தும் அவன் ஒரு தடவை கூட கயல்விழிக்கு தெரியப்படுத்தியதுகிடையாது.


அவள் இப்போது எங்கே, எப்படி இருப்பாள், போகவேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்திருப்பாளா என தன்னுள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை தெரியாதவனாக சென்றுகொண்டிருந்தான்.
அப்போது இளங்கோ, அம்மா கயலுக்கு வடமராட்சியில ஆரேனும் சொந்தக்காரர் இருக்கினமோ! அவள் எங்கே போய் இருக்கிறது என்று ஏதாவது சொன்னவளா? இப்போது நாங்கள் எங்கே போய் இருக்கின்றது? என்றான்! அவள் ஒன்றும் சொல்லவில்லை, அவளுக்கும் எங்களைப்போல் தான் சொந்தக்காரர் ஆரும் அங்கு இருக்கிறதாக தெரியவில்லை, புறப்படுகின்ற அவசரத்தில் நானும் கேட்க மறந்துவிட்டேன். முதல் போய்ச்சேருவம் பின்பு பார்ப்போம் என்றாள் தெய்வானை.

ஆரும் எதிர்பாராதவிதமாக திடீரென காற்றைக் கிழித்துக் கொண்டு ஏதோ வரும் சத்தத்தைக் கேட்ட இளங்கோ, வண்டியைத் தள்ளிவிட்டு தெய்வானையை கட்டி அணைத்தபடி தரையில் சாய்ந்தான். காதைப் பிளக்கும் சத்தம், ஓரே தூசி மூட்டம், ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. சில நிமிட மயாண அமைதியை தொடர்ந்து. அம்மா உங்களுக்கு ஒன்றும் இல்லைத்தானே என்றவனால் வலது கையை தூக்க முடியவில்ல்லை. ஆம் அவனது கையில் இருந்து இரத்தம் வழிவதை சற்றும் எதிர் பாராத தெய்வானை பதறிப்போனால். அய்யோ.. என கத்தியும் ஆரும் உதவிக்கு வரவில்லை. அனால் திடமான உள்ளம் கொண்ட இளங்கோ. அம்மா எனக்கு ஒன்றும் இல்லை. சிறிய காயம் தான் எதாவது எடுத்து கட்டிவிடுங்கோ என்றான். உடனே தெய்வானை தனது சேலையை கிழித்து காயத்திற்கு கட்டுப்போட்டாள்.


மீண்டும் ஒருவாறு பயணம் தொடர்கிறது. சில மைல் தூரம் சென்றபின்பு, தூரத்தே சில ஆள் நடமாட்டம் காணக்கூடியதாக இருக்கின்றது, ஆனால் ஆரது என புலப்படவில்லை. நெருங்கிச்செல்லவும் பயமாக இருக்கின்றது. அறவும் மழையில் நனைந்தவனுக்கு குளிர் என்ன, கூதல் என்ன, என நினைத்த இளங்கோ, ஆனது ஆகட்டும் என நெருங்கிச்செல்கின்றான். அப்போது தமிழில் உரையாடுவதை கேட்டவனுக்கு அவர்களை இனம்காணக்கூடியதாக இருக்கின்றது. நூற்றிற்கும் மேற்பட்ட இளைஞ்ஞர்களும், யுவதிகளும் ஆயுதம் தரித்து நின்றனர். அவர்களில் சிலர் ஒடிவந்து காயப்பட்ட இளங்கோவிற்கு உரியமுதலுதவி வளங்க, சிலர் தெய்வானைக்கு உணவு வளங்கினர்.


உரிய இடத்திற்கு போவோமா அல்லது வழியிலேயே மடிந்து போவோமா என நினைத்தவர்களுக்கு மனதளவில் தைரியத்தை ஏற்படுத்தியது. ஒருசில மணி காத்திருப்பின் பின்பு அவர்கள் சிறிய ரக வாகனம் ஒன்றில் ஏற்றி வடமராட்சியில் கொணர்ந்து விட்டார்கள். இதுவரை சந்தித்த சவால்களிலும் பார்க்க கயல்விழியை கண்டுபிடிப்பதே அவனுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது.

தொடரும்....
 
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்.

No comments:

Post a Comment