ஆகையால் அமெரிக்க பச்சை நிற அட்டையை குலுக்கல் முறையில் (US Lottery program of Green Card Year 2010) பெற முயற்சிப்போம் என முடிவெடுத்தேன். அப்போது வலைத் தளத்தில் (Web Site) தேடும் படலத்தில் இறங்கி, அச்சு அசல் அமெரிக்க அரசின் இனையத்தளத்தின் மாதிரியை ஒத்த ஒரு தளத்தில் பதிவு செய்தேன். அதில் கேட்கப்பட்ட விபரங்கள் அளித்த பின்பு இறுதியில் 1,2,3 அல்லது 4 வருடம் வரையான கட்டணம் அறவிடப்படுகின்றது. அதில் எனது கடன் அட்டை (Credit Card) விபரம் கேட்கப்பட்டதால் பதிவுசெய்வதை இடைநிறுத்திவிட்டேன்.
ஆனால் உடனேயே எனது மின்னஞ்சல் மூலம் பதிவு இலக்கம், பாவனையாளர் பெயர், கடவுச்சொல் உள்ளடங்கிய விபரம் வந்தது. இது சற்று நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது. அவ்வாறு இருக்க நான் பதிவுசெய்து இரண்டுவார காலத்தின் பின்பு எனது தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. தாம் USல் இருந்து பேசுவதாகவும், எனது பதிவை உறுதிசெய்வதற்கு அழைத்ததாக இருவர் என்னுடன் தொடர்பு கொண்டனர். அவர்கள் அதில் என்னைக்கேட்டார்கள் என்ன காரணத்திற்காக பதிவுசெய்வதை இடைநிறுத்தி விட்டீர்கள் என்று, நான் சொன்னேன் கடன் அட்டை விபரம்கேட்டகாரணத்தால் என, அதற்கு அவர்களால் எனக்கு ஒரு மணி நேர விளக்கம் அளிக்கப்பட்டது. தமது வாடிக்கையாளர் விபரம், கடன் அட்டை பயன்படுத்த தாம் உபயோகிக்கும் பாதுகாப்பு நடைமுறை (Secure security system) போன்றவிபரம் அவர்களால் எனக்கு செல்லப்பட்டது.
தொலைபேசி அழைப்பின் பின் புலத்தில் மிகவும் கடுமையாக பணிபுரியும் காரியாலயம் ஒன்றில் இருந்து பேசுவது போன்ற ஓர் தோற்றப்பாடு என்னால் உணர முடிந்தது. பேசும்போது இடையிடையே தயவுசெய்து ஒரு நிமிடம் காத்திருக்கவும் போன்ற சொற்றொடரை உபயோகித்தார்கள் (Wait a movement please,Sir),
நிஜமாகவே நானும் நம்பிவிட்டேன். பேசுவது வேள்ளைக்காரன் இல்லையா. நான் நினைக்க மறந்தது வெள்ளைக்காரனில் கள்ளனும் இருக்கிறான் என்று. இறுதியில் நான் சொன்னேன் சரி நான் எனது விண்ணப்ப பதிவை தொடர்கின்றேன் என.
பின்பு அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து (என்னை மூழ்கடிக்க) இனைப்பை துண்டித்து விட்டார்கள். நான் மறு நாள் காலை மீண்டும் இனையத்தளம் ஊடாக பதிவைத் தொடர்ந்து கடன் அட்டை விபரத்தை வளங்கி 1 வருட சந்தாவாக 55 € வை செலுத்திவிட்டேன்.
செலுத்திய மறுகனம் எனது வங்கியில் இருந்து தொலைபேசி அழைப்பு. அது ஓர் ஏமாற்றுப்பேர் வழி எனவும், உடனடியாக எனது கடன் அட்டையை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்கள். எனது அதிஷடம் எனது வங்கி உஷாராக இருந்ததல் எனக்கு ஏற்பட இருந்த நஷ்டம் தவிர்க்கப்பட்டது.
டுபாய்க் காரனுக்கே டுபாக்கூர் கொடுக்க, அமெரிக்கா காரன் நினைக்கிறான். தப்பினேன் பிழைச்சேன். நீங்களும் கவனம்.
1 comment:
That's not American cheater. It's from Nigeria. Nigerians are notorious for international frauds. Both Indian and Tamil Nadu governments have issued statements to the public warning the public against Internet and other such frauds by Nigerian gangs. When they speak, they speak in American accent. They also assume American names. Before you swipe your card on the Internet, you must check the original https security and original site certificate etc.
Post a Comment