Thursday, 6 May 2010

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி



பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.
ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த
சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
வீடியோ வடிவில் காண


எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண



கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன.
தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.
இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.
அவற்றை இணையத்தில் தேடி உங்கள் கணினியில் நிறுவ வேண்டி வரும். சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது. புதிதாக கணினி வாங்கிய நண்பர்கள் / உறவினர்கள் அடிக்கடி என்னிடம் கொண்டு வரும் பிரச்சனை இது.
இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.
VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.
இது முற்றிலும் இலவசம். தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த
சுட்டிக்கு சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
இனி 'கணினியில் இந்த வீடியோ திறக்க மாட்டேன் என்கிறது' என்ற பிரச்னைக்கு முடிவு காட்டுங்கள். இணைய உலாவிகளில் பயர்பாக்ஸ் எப்படி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக உள்ளதோ அது போல் விண்டோஸ் மீடியா ப்ளேருக்கு மிகச்சிறந்த மாற்று விஎல்சி மீடியா பிளேயர். இது ஒவ்வொருவர் கணினியிலும் காட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்.
விஎல்சி மீடியா பிளேயர் வீடியோ பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் வீடியோக்களை வெட்டுவது, இணைய ஒளிபரப்புகளை பார்க்க, வீடியோ கன்வெர்ட் செய்ய, உங்கள் வீடியோக்களை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப, உங்கள் கணினி ஸ்க்ரீன் காட்சிகளை பதிவு செய்ய என பல விதங்களில் பயன்படுகிறது.


Tuesday, 4 May 2010

கள்ளர் ஜாக்கிரதை

இது எனக்கு நடந்த ஓர் உண்மை சம்பவம். நீண்ட நாட்களாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணி புரியும் எனக்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என அவா. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பணிபுரிவதற்கான விசா எடுத்து செல்வது என்பது முட்டாள் தனமான வேலை, அதுவும் கட்டுமாணப் பணியில் வேலை என்றால் சொல்லவே தெவையில்லை. ஏனென்றாள் உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட பின்பு பெருபாலான பணியாளர்கள் தமது வேலையை இழந்து தமது நாடுகளுக்கு திரும்பிய வண்ணம் இருப்பது யாவரும் அறிந்ததே. இப் பிரச்சனையில் மிகவும் அடிவாங்கிய நாடு என்றால் அமெரிக்கா என்பது உண்மை.



ஆகையால் அமெரிக்க பச்சை நிற அட்டையை குலுக்கல் முறையில் (US Lottery program of Green Card Year 2010) பெற முயற்சிப்போம் என முடிவெடுத்தேன். அப்போது வலைத் தளத்தில் (Web Site) தேடும் படலத்தில் இறங்கி, அச்சு அசல் அமெரிக்க அரசின் இனையத்தளத்தின் மாதிரியை ஒத்த ஒரு தளத்தில் பதிவு செய்தேன். அதில் கேட்கப்பட்ட விபரங்கள் அளித்த பின்பு இறுதியில் 1,2,3 அல்லது 4 வருடம் வரையான கட்டணம் அறவிடப்படுகின்றது. அதில் எனது கடன் அட்டை (Credit Card) விபரம் கேட்கப்பட்டதால் பதிவுசெய்வதை இடைநிறுத்திவிட்டேன்.

ஆனால் உடனேயே எனது மின்னஞ்சல் மூலம் பதிவு இலக்கம், பாவனையாளர் பெயர், கடவுச்சொல் உள்ளடங்கிய விபரம் வந்தது. இது சற்று நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது. அவ்வாறு இருக்க நான் பதிவுசெய்து இரண்டுவார காலத்தின் பின்பு எனது தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. தாம் USல் இருந்து பேசுவதாகவும், எனது பதிவை உறுதிசெய்வதற்கு அழைத்ததாக இருவர் என்னுடன் தொடர்பு கொண்டனர். அவர்கள் அதில் என்னைக்கேட்டார்கள் என்ன காரணத்திற்காக பதிவுசெய்வதை இடைநிறுத்தி விட்டீர்கள் என்று, நான் சொன்னேன் கடன் அட்டை விபரம்கேட்டகாரணத்தால் என, அதற்கு அவர்களால் எனக்கு ஒரு மணி நேர விளக்கம் அளிக்கப்பட்டது. தமது வாடிக்கையாளர் விபரம், கடன் அட்டை பயன்படுத்த தாம் உபயோகிக்கும் பாதுகாப்பு நடைமுறை (Secure security system) போன்றவிபரம் அவர்களால் எனக்கு செல்லப்பட்டது.



தொலைபேசி அழைப்பின் பின் புலத்தில் மிகவும் கடுமையாக பணிபுரியும் காரியாலயம் ஒன்றில் இருந்து பேசுவது போன்ற ஓர் தோற்றப்பாடு என்னால் உணர முடிந்தது. பேசும்போது இடையிடையே தயவுசெய்து ஒரு நிமிடம் காத்திருக்கவும் போன்ற சொற்றொடரை உபயோகித்தார்கள் (Wait a movement please,Sir),

நிஜமாகவே நானும் நம்பிவிட்டேன். பேசுவது வேள்ளைக்காரன் இல்லையா. நான் நினைக்க மறந்தது வெள்ளைக்காரனில் கள்ளனும் இருக்கிறான் என்று. இறுதியில் நான் சொன்னேன் சரி நான் எனது விண்ணப்ப பதிவை தொடர்கின்றேன் என.



பின்பு அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து (என்னை மூழ்கடிக்க) இனைப்பை துண்டித்து விட்டார்கள். நான் மறு நாள் காலை மீண்டும் இனையத்தளம் ஊடாக பதிவைத் தொடர்ந்து கடன் அட்டை விபரத்தை வளங்கி 1 வருட சந்தாவாக 55 € வை செலுத்திவிட்டேன்.

செலுத்திய மறுகனம் எனது வங்கியில் இருந்து தொலைபேசி அழைப்பு. அது ஓர் ஏமாற்றுப்பேர் வழி எனவும், உடனடியாக எனது கடன் அட்டையை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்கள். எனது அதிஷடம் எனது வங்கி உஷாராக இருந்ததல் எனக்கு ஏற்பட இருந்த நஷ்டம் தவிர்க்கப்பட்டது.

டுபாய்க் காரனுக்கே டுபாக்கூர் கொடுக்க, அமெரிக்கா காரன் நினைக்கிறான். தப்பினேன் பிழைச்சேன். நீங்களும் கவனம்.